எங்களுடைய சமூக வாழ்வில் பல கதைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்று பல விடயங்கள். இவற்றை நம்புவதா அல்லது தற்போது எல்லோராலும் பின்பற்றப்படுகின்றதும் உலக ஒட்டம் என்று சொல்லப்படுவதற்கும் பின்னால் ஒடுவதா என்ற ஒரு வித மயக்கம் சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை மனதிற்குள் இருந்து ஆட்டி வைப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
இவற்றை ஆராய்வதா அல்லது எமக்கேன் வீண் பிரச்சனை என்று ஒதுங்கிக்கொண்டு உலக ஓட்டத்துடன் சென்று விடுவதா? என வீணாக அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. எல்லாமே உரிய வகையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.
உலகின் சுழற்சி, பால் வெளி மண்டலத்தில் கோள்களின் அசைவியக்கம் இவற்றால் ஏற்படுகின்ற மாற்றம், இந்த மாற்றத்தால் ஏற்படுகின்ற தாக்கம் எல்லாமே எல்லா உயிரினங்களையும் பொருட்களையும் கொண்டு தீர்மானிக்கப்படுவதாகும்.
இவற்றில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள் தாக்கங்களை விஞ்ஞானம் என்று சொல்லப்படுவதால் அளவிடவோ அல்லது எதிர்வு கூறவோ முடிவதில்லை. பதிலாக மெய் ஞானத்தால் மட்டுமே உணரக்கூடியதாகும்.
மெய் உணர்தல், மெய் அறிவு பெறுதல், மெய்ப் பொருள் காணுதல் என மெய்யுடன் சம்பந்தப்பட்ட எல்லாமே மெய் என்கின்ற உடலால் மட்டுமே உணரக்கூடியதாகும்.
இந்த உலக வாழ்வில் நாம் செய்யக் கூடியது எல்லாம், எமக்கு தற்போது கிடைத்துள்ள பணியை அந்த நிலைகளில் இருந்து சிறப்பாக செய்வதாகும். இவ்வாறு செய்வதால் ஏற்படுகின்ற நெருக்கடிகளை வெற்றி கொள்ளும் போது எல்லாமே உண்மை என்பது உணரப்படும்.
அதுவே உலகில் எல்லோரும் போற்றுகின்ற, வழிபடுகின்ற மாபெரும் சக்தி......
Thursday, August 6, 2009
சோமாஸ்கந்தவேள் சுவாமி
வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துக்குள் வைக்கப்படும் என்கின்றது திருக்குறள். வானில் இருந்து மக்களை வழி நடத்தும் தெய்வங்கள், நாம் செய்யும் காரியங்களில் எமக்கு துணையாக இருப்பார்கள் என்று நம்பினார்கள் எங்கள் முன்னோர்கள்.
அவற்றை உண்மையாக்கியவர்கள் இவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழந்து, அண்மையில் வானுறையும் தெய்வத்துடன் சேர்ந்து கொண்டவர் சுவாமி சோமாஸ்கந்தவேள் அவர்கள்

அவற்றை உண்மையாக்கியவர்கள் இவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழந்து, அண்மையில் வானுறையும் தெய்வத்துடன் சேர்ந்து கொண்டவர் சுவாமி சோமாஸ்கந்தவேள் அவர்கள்

யோகர் சுவாமி
யோகர் சுவாமி என்று அழைக்கப்பட்ட சித்தர் மக்களின் ஆறுதலுக்காக தன்னை அர்ப்பணித்தவர்.
சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.
அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.

கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.
தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.

எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "டேய்! நீ யார்?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.
குரு தீட்சை பெற்று சாமியின் மிதியடிகளை வாங்கி கொண்டு அவரின் ஆசீர்வாதத்துடன் கொழும்புத்துறைக்கு போனார். அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருப்பது வழமை. செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.
மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் கொழும்புத்துறையில் உள்ள அவரது ஆசிரமத்தில் காலமானார்.
யோகசுவாமிகள் தன்னிடம் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்குத் திரும்பத்திரும்பக் கூறுவது:
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை
இவர் யோகர் சுவாமியின் சீடர்ஹவாய் தீவில் ஆச்சிரம வாழ்க்கை வாழ்ந்தார்.
நன்றி
கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து
கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து
Wednesday, August 5, 2009
ஏகாந்தம்

இந்த பூமியில் பிறந்து தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற இயற்கையான மற்றும் செயற்கையான துன்பங்களை மறந்து ஏகாந்த நிலையில் இருப்பவன் ஏவனோ அவனே தொடர்ந்தும் ஏகாந்த இன்பத்தை அனுபவிக்கின்றான்.
இந்த நிலை பெண்களாகப் பிற்ந்தவர்களுக்கு ஏற்படுவதில்லையா என்று ஏங்க வேண்டாம். ஆன்மாவில் பெண் ஆண் என்ற பேதமில்லை. ஆனாலும் உருவத்தில் ஏற்படுகின்ற இயற்கையான வேற்றுமை வாழ்வியில் சில நேருக்கடிகளை கொடுக்கின்றது.
ஒளவையாரின் பாடலில் கூறியவாறு அரிது அரிது மானிடராவது...................பேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிற்ந்தகாலையும்............

Tuesday, August 4, 2009
Subscribe to:
Posts (Atom)