Thursday, August 6, 2009

இறைவனைக் காணுதல்

எங்களுடைய சமூக வாழ்வில் பல கதைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்று பல விடயங்கள். இவற்றை நம்புவதா அல்லது தற்போது எல்லோராலும் பின்பற்றப்படுகின்றதும் உலக ஒட்டம் என்று சொல்லப்படுவதற்கும் பின்னால் ஒடுவதா என்ற ஒரு வித மயக்கம் சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை மனதிற்குள் இருந்து ஆட்டி வைப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

இவற்றை ஆராய்வதா அல்லது எமக்கேன் வீண் பிரச்சனை என்று ஒதுங்கிக்கொண்டு உலக ஓட்டத்துடன் சென்று விடுவதா? என வீணாக அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. எல்லாமே உரிய வகையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.
உலகின் சுழற்சி, பால் வெளி மண்டலத்தில் கோள்களின் அசைவியக்கம் இவற்றால் ஏற்படுகின்ற மாற்றம், இந்த மாற்றத்தால் ஏற்படுகின்ற தாக்கம் எல்லாமே எல்லா உயிரினங்களையும் பொருட்களையும் கொண்டு தீர்மானிக்கப்படுவதாகும்.

இவற்றில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள் தாக்கங்களை விஞ்ஞானம் என்று சொல்லப்படுவதால் அளவிடவோ அல்லது எதிர்வு கூறவோ முடிவதில்லை. பதிலாக மெய் ஞானத்தால் மட்டுமே உணரக்கூடியதாகும்.

மெய் உணர்தல், மெய் அறிவு பெறுதல், மெய்ப் பொருள் காணுதல் என மெய்யுடன் சம்பந்தப்பட்ட எல்லாமே மெய் என்கின்ற உடலால் மட்டுமே உணரக்கூடியதாகும்.

இந்த உலக வாழ்வில் நாம் செய்யக் கூடியது எல்லாம், எமக்கு தற்போது கிடைத்துள்ள பணியை அந்த நிலைகளில் இருந்து சிறப்பாக செய்வதாகும். இவ்வாறு செய்வதால் ஏற்படுகின்ற நெருக்கடிகளை வெற்றி கொள்ளும் போது எல்லாமே உண்மை என்பது உணரப்படும்.

அதுவே உலகில் எல்லோரும் போற்றுகின்ற, வழிபடுகின்ற மாபெரும் சக்தி......

No comments:

Post a Comment